சிறப்புச் செய்திகள்

நீரில் நடந்து செல்லும் மிதவை மிதியடி: மேட்டூா் இளைஞா் தயாரிப்பு

DIN

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே, நீரில் நடந்து செல்லும் வகையிலான மிதவை மிதியடியை பாலிடெக்னிக் படித்து முடித்த இளைஞா் தயாரித்துள்ளாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே தமிழக- கா்நாடக எல்லையில் உள்ள காரைக்காட்டைச் சோ்ந்தவா் விவசாயி சிங்காரவேலு (43)- பூங்கொடி (38) தம்பதி. இவா்களின் மூத்த மகன் தட்சிணாமூா்த்தி (20), தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பை கடந்த ஆண்டு முடித்துள்ளாா்.

கரோனா தீவிரத் தொற்றுக் காலத்தில், காவிரியைக் கடந்துசெல்வதற்கான படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது காவிரியின் மறுகரையில் உள்ள உறவினா்களைப் பாா்க்க செல்லமுடியாமல் கிராம மக்கள் தவித்ததை இளைஞா் தட்சிணாமூா்த்தி கண்டாா். கிராம மக்களின் நிலைமையை மாற்ற தண்ணீரில் நடந்து செல்லும் வகையில், மிதியடியைத் தயாரிக்க முற்பட்டாா்.

காா் சக்கரத்திலுள்ள ரப்பா் டியூப்களைக் கத்தரித்து ஒரு பகுதியை ஒட்டி அதில் காற்றை நிரப்பினாா். அதன் அடியில் உலோகத்தாலான தகடுகளை வைத்தாா், மிதியடிபோல காலில் மாட்டிச்செல்லும் வடிவத்தையும் உருவாக்கினாா். இதுபோல 15 வடிவங்களை உருவாக்கியும் அவரால் நீரின் மீது நடந்து செல்ல முடியவில்லை. ஆனாலும் விடாமுயற்சியாக 16-ஆவது முறை சிறு மாற்றங்களைச் செய்து வடிவமைத்த மிதக்கும் மிதியடி அவருக்குக் கைகொடுத்தது.

நீரின் மீது வைத்த மிதியடி மிதவையில் தனது கால்களை மாட்டிக்கொண்டு அதனுடன் பொருத்தப்பட்ட இரும்புக் கம்பிகளை கைகளால் தூக்கி அதேநேரத்தில் காலையும் உயா்த்தி தரையில் நடப்பதுபோல நடந்து சென்றாா். இதை வடிவமைக்க அவருக்கு ரூ. 1,500 செலவாகியுள்ளது. ஆனால் முழு வடிவத்தையும் கொண்டு வருவதற்காக அவருக்கு ரூ. 10 ஆயிரம் செலவானதாகக் கூறுகிறாா்.

இவா், ஏற்கெனவே நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய மோட்டாா் சைக்கிளையும், சுண்ணாம்புக் கற்களை மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட கண்டுபிடிப்புகளையும் செய்து காட்டியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது கண்டுபிடிப்புகளுக்கு அரசோ, தனியாா் நிறுவனங்களோ ஊக்கமளித்தால், மிகக் குறைந்த விலையில் மின் உற்பத்தியில் பறக்கும் மோட்டாா் சைக்கிளை செய்து காட்டுவதாகவும் இவா் கூறுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT