முகப்பு
சிறப்புச் செய்திகள்

பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..

Updated On : 2 அக்டோபர், 2020 at 11:33 AM
பகிர்:
Updated On : 5 அக்டோபர், 2020 at 10:34 AM

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

Updated On : 5 அக்டோபர், 2020 at 10:34 AM

இந்தியாவில் 66 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 66 லட்சத்தைக் கடந்துள்ளது. 

Updated On : 4 அக்டோபர், 2020 at 10:03 AM

கேரளத்தில் ஒரே நாளில் 8,553 பேருக்கு கரோனா; 23 பேர் பலி

கேரளத்தில் இன்று ஒரே நாளில் 8,553 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

 
 
Updated On : 4 அக்டோபர், 2020 at 6:17 AM

தமிழகத்தில் புதிதாக 5,489 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,489 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
Updated On : 4 அக்டோபர், 2020 at 4:35 AM

தெலங்கானாவில் 2 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

 தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,949 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு...

Updated On : 4 அக்டோபர், 2020 at 4:35 AM

ஒடிசாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா

 ஒடிசாவில் புதிதாக 3,326 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு...

Updated On : 4 அக்டோபர், 2020 at 4:34 AM

மகாராஷ்டிரம்: 24 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்களுக்கு கரோனா

 மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 144 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு...

Updated On : 3 அக்டோபர், 2020 at 11:55 AM

இந்தியாவில் கரோனா பாதித்த 9.44 லட்சம் பேருக்கு தீவிர சிகிச்சை

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 லட்சத்தைக் கடந்துள்ளது. அதே சமயம், குணமடைந்தோர் எண்ணிக்கையும் 54 லட்சத்தைக் கடந்துள்ளது. விரிவான செய்திக்கு...
Updated On : 3 அக்டோபர், 2020 at 11:54 AM

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 75,49,323 ஆக உயர்வு

அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 7,549,323 ஆக அதிகரித்துள்ளது. 
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு அடுத்து பாதிக்கப்பட்டுள்ள உலகத் தலைவா்களின் பட்டியலில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் இணைந்துள்ளாா்.விரிவான செய்திக்கு...
Updated On : 3 அக்டோபர், 2020 at 11:53 AM

கரோனா: உலகளவில் 2.58 கோடி பேர் குணமடைந்தனர்

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2.58 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புக்கு இதுவரை 10.33 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு...
Updated On : 3 அக்டோபர், 2020 at 11:51 AM

2 மணி நேரத்தில் கரோனா பரிசோதனை முடிவை அளிக்கும் ஆா்.டி.-பிசிஆா் கருவி

புது தில்லி: கரோனா பரிசோதனை முடிவை இரண்டு மணி நேரத்தில் தெரிவிக்கக் கூடிய வகையிலான (ஆா்.டி.-பிசிஆா் கருவி) விரைவுப் பரிசோதன கருவியை ரிலையன்ஸ் வாழ்வியல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இப்போது நடைமுறையில் இருக்கும் ஆா்.டி.-பிசிஆா் கருவிகள் கரோனா பரிசோதனை முடிவுகளைத் தெரிவிக்க 24 மணி நேரமாகும் நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் வாழ்வியல் நிறுவனம் உருவாக்கியிருக்கும் கருவி மிக விரைவாக முடிவுகளை தெரிவுக்கும் திறனைக் கொண்டுள்ளது. விரிவான செய்திக்கு...
Updated On : 3 அக்டோபர், 2020 at 8:07 AM

பிளாஸ்மா தானம் செய்தார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

கரோனா நோய் தொற்றில் இருந்து மீண்ட மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிளாஸ்மா தானம் செய்துள்ளார். 

Updated On : 3 அக்டோபர், 2020 at 7:31 AM

தில்லியில் இன்று 2,258 பேருக்கு கரோனா: 34 போ் பலி

தில்லியில் இன்று 2,258 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 3 அக்டோபர், 2020 at 6:58 AM

சென்னையில் 1,364; பிற மாவட்டங்களில் 4,258: மாவட்டவாரியாக கரோனா நிலவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,258 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
Updated On : 3 அக்டோபர், 2020 at 6:08 AM

தமிழகத்தில் புதிதாக 5,622 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 5,622 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
 
Updated On : 3 அக்டோபர், 2020 at 4:52 AM

மகாராஷ்டிரத்தில் மேலும் 190 காவலர்களுக்கு கரோனா; பலி எண்ணிக்கை 250ஆக உயர்வு

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 190 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
Updated On : 3 அக்டோபர், 2020 at 4:41 AM

உலகளவில் குணமடைவோர் விகிதம் இந்தியாவில் அதிகம்

 உலகிலேயே கரோனா தொற்றுக்குள்ளாகி அதிலிருந்து குணமடைவோர் விகிதம் இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. உலகளவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் இந்தியாவில் 21 சதவீதமாக உள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 3 அக்டோபர், 2020 at 3:50 AM

ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,859 பேருக்கு கரோனா

ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,859 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
Updated On : 3 அக்டோபர், 2020 at 3:50 AM

ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,859 பேருக்கு கரோனா

ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,859 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
Updated On : 3 அக்டோபர், 2020 at 1:01 AM

ஒடிசாவில் புதிதாக 3,053 பேருக்கு கரோனா; மேலும் 17 பேர் பலி

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,053 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு  2,29,387-ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...

Updated On : 2 அக்டோபர், 2020 at 10:54 AM

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கரோனா

 அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  விரிவான செய்திக்கு..

Updated On : 2 அக்டோபர், 2020 at 10:53 AM

நாட்டில் இதுவரை 7.67 கோடி கரோனா பரிசோதனைகள்

நாட்டில் இதுவரை 7.67 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அந்தவகையில், வியாழக்கிழமையான நேற்று ஒரே நாளில் 10,97,947 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 7,67,17,728-ஆக அதிகரித்துள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

Updated On : 2 அக்டோபர், 2020 at 10:53 AM

நாட்டில் புதிதாக 81,214 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 64 லட்சத்தை கடந்தது

 நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக  81,214 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,095-ஆக அதிகரித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.  கரோனா பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 81,214 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 9,42,217 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கரோனா தொற்றிலிருந்து 53,52,078 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,095 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை  99,773-ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 2 அக்டோபர், 2020 at 9:50 AM

ஆந்திரத்தில் 6,555, கர்நாடகத்தில் 8,793 பேருக்கு கரோனா

 ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.விரிவான செய்திக்கு..

Updated On : 2 அக்டோபர், 2020 at 8:27 AM

தில்லியில் புதிதாக 2,920 பேருக்கு கரோனா

 தில்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 2,920 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 2 அக்டோபர், 2020 at 7:47 AM

கேரளத்தில் அதிகரிக்கும் கரோனா

 கேரளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 9258 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 2 அக்டோபர், 2020 at 6:13 AM

தமிழகத்தில் புதிதாக 5,595 பேருக்கு கரோனா

 தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 5,595 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

Updated On : 2 அக்டோபர், 2020 at 6:01 AM

சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு

சென்னையில் இதுவரை கரோனா பாதித்தவர்கள், சிகிச்சையின் பலனாக 1,53,846 பேர் குணமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 11,615 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விரிவான செய்திக்கு..

Updated On : 2 அக்டோபர், 2020 at 6:00 AM

சென்னையில் வரும் 5-ம் தேதி முதல் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் ரயில் சேவை

சென்னையில் வரும் 5-ம் தேதி முதல் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் ரயில் சேவை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 2 அக்டோபர், 2020 at 5:59 AM

மடியும் மனிதம்: கரோனா நோயாளிகளின் உடல்களை வாங்க குடும்பத்தினர் மறுப்பு

உலகம் முழுவதும் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது கரோனா தொற்று. அதோடு, சமுதாயத்தின் இருண்ட பக்கங்களைப் புரட்டிப்போட்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தும் இருக்கிறது. விரிவான செய்திக்கு..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.