யுபிஐ பரிமாற்றம் 
சிறப்புச் செய்திகள்

இனி, யுபிஐ மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.2,000-தான் பரிமாற்றம் செய்ய முடியுமா? இல்லை!

யுபிஐ மூலம் ஒரு நாளைக்கு ரூ.2,000 தான் பரிமாற்றம் செய்ய முடியும் என்ற தகவல் தவறானது.

இணையதளச் செய்திப் பிரிவு

யுபிஐ மூலம் ஒரு நாளைக்கு ரூ.2,000 தான் பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்பது போன்ற தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், உண்மையில் யுபிஐ-யின் விபிஏ என்ற மெய்நிகர் கட்டண முகவரி மூலம் பணத்தைப் பெறுவதற்குத்தான் இந்த வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதாவது விபிஏ (Virtual Payment Address- VPA) மூலம் ஒருநாளைக்கு அதிகபட்சமாக ரூ.2,000 மட்டுமே பணப்பரிமாற்றம் அல்லது ஒருவரிடம் கோரி பணத்தைப் பெற முடியும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த பணப்பரிமாற்ற இலக்கு காரணமாக, யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியாதோ?, கட்டணம் வசூலிக்கப்படுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. அது உண்மையில்லை.

மாறாக, ஒரு வங்கிக் கணக்கின் விபிஏ எனப்படும் மெய்நிகர் பணம் செலுத்தும் முகவரி மூலமாக பணப் பரிமாற்றத்துக்குத்தான் இந்த விதிமுறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபிஏ முறையில் பணப்பரிமாற்றம்

ஒருவரது வங்கிக் கணக்குக்கு யுபிஐ வசதி ஏற்படுத்தப்படும்போது, அதற்கான அடையாள முகவரியும் சேர்ந்தே உருவாக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு யுபிஐ ஐடிக்கும், ஒரு விபிஏ (VPA) உருவாக்கப்படுகிறது. இதனை மெய்நிகர் கட்டண முகவரி (VPA) என்கிறார்கள். இதுதான் ஒரு வங்கிக் கணக்கின் யுபிஐ ஐடியாக இருக்கும். இந்த விபிஏ என்பது ஒருவரது பெயர் அல்லது செல்போன் எண் மற்றும் அட் சிம்பள் (@), வங்கிப் பெயர் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு மின்னஞ்சலைப் போல இருக்கும்.

இந்த விபிஏ முகவரியைக் கொண்டு பணப்பரிமாற்றம் செய்யலாம். ஒருவர் உங்களுக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்றால், வங்கிக் கணக்கு எண் அல்லது உங்கள் தொலைபேசி எண்களைவிடவும், இந்த விபிஏ ஐடியைக் கேட்டு எளிதாக பணம் அனுப்பலாம். இதனால், வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்ப வேண்டிய அவசியமில்லாமல் போகிறது.

இந்த விபிஏ மூலம் பணப் பரிமாற்றம் செய்ய வங்கிக்கு வங்கி பல்வேறு வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில்தான், ஒருவர், விபிஏ ஐடியைப் பயன்படுத்தி, மற்றொருவரிடமிருந்து ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.2,000 மட்டுமே கோரிப் பெற முடியும் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல, இந்த முறையில், ஒரு சிறு வியாபாரி, ஒரு நாளைக்கு ரூ.2,000 மட்டுமே பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கும் நாம் யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒருவர் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரையில் யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் செய்யலாம். இது வங்கிகளைப் பொறுத்து மாறுபடலாம். அதுபோல, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 பணப்பரிமாற்றங்களை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைமுறைக்கு வந்த புதிய விதிமுறை!

என்பிசிஐ எனப்படும் தேசிய பணப்பரிமாற்ற கார்ப்பரேஷன் இந்தியா வெளியிட்டிருக்கும் புதிய விதிமுறை இன்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. எனவே, உங்கள் செல்போனில் இருக்கும் கூகுள் பே, போன் பே செயல்படுகிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

அதாவது, பல ஆண்டுகளுக்கு முன்பு, வங்கிக் கணக்குத் தொடங்கும் போது கொடுத்த செல்போன் எண்ணை தற்போது ஒருவர் பயன்படுத்தாமல் இருக்கலாம். அந்த செல்போன் எண் செயலற்று வேறு ஒருவரின் பயன்பாட்டுக்கும் வழங்கப்பட்டிருக்கலாம்.

இதனால், அந்த வங்கிக் கணக்கே முடக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. ஒருவேளை அவ்வாறு உங்கள் பணப்பரிமாற்ற செயலி பயனற்றுப் போயிருந்தால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. உடனடியாக தங்களது வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண்கள் என்ன என்பதை உறுதி செய்துகொண்டு, அது பழைய எண்ணாக இருந்தால், உடனடியாக வங்கிக்குச் சென்று பழைய எண்ணை மாற்றிவிட்டு தற்போது பயன்படுத்தும் புதிய எண்ணைக் கொடுத்துவிட்டால் போதும், வங்கிக் கணக்கும் பணப்பரிமாற்ற செயலிகளும் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

புதிய விதிமுறை என்ன?

வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண் பயன்பாட்டில் இல்லாமலோ அல்லது அந்த எண் 90 நாள்களுக்கும் மேல் செயல்பாட்டில் இல்லாமல் இருந்து அது தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மூலம், புதிய செல்போன் பயனர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டிருந்தாலோ, அந்த எண் இணைக்கப்பட்டிருந்த வங்கிக் கணக்கை முடக்கி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், நிதி மோசடி அல்லது தவறான வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்புதல் போன்ற சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

ஒருவர் தான் எத்தனை வங்கிக் கணக்கு பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், அவற்றுடன் என்னென்ன எண்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவை பயன்பாட்டில் உள்ளதா? என்பதை அறிந்துகொண்டு, அவ்வாறு ஏதேனும் பழைய எண் இணைக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கை பயன்படுத்திக் கொண்டிருந்தால் உடனடியாக அந்த வங்கிக் கிளைக்குச் சென்று புதிய எண்ணை அப்டேட் செய்ய வேண்டும்.

இந்த புதிய விதிமுறை ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டதால், பணப்பரிமாற்ற செயலிகள் செயல்படுகிறதா என்பதை உறுதி செய்துகொண்டு, செயல்படவில்லை என்றால், வங்கிக் கிளையை அணுகவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் விண்வெளி வீரர் அனுமன்! மாணவர்களுடன் உரையாற்றிய அனுராக் தாக்குர்!

கோவையில் வனத் துறையினரின் வாகனத்தை தாக்கி கண்ணாடியை உடைத்த காட்டு யானை

நொய்டா வரதட்சிணை கொலை: சொகுசு கார், பைக், தங்கம், பணம்.. நீளும் பட்டியல்

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

சென்னையில் போக்குவரத்து எஸ்எஸ்ஐ தற்கொலை!

SCROLL FOR NEXT