தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடியைப் பற்றி ஆந்திர எம்பி அடித்த பரபரப்பு கமெண்ட்!

மோடி குறித்து திவாகர் ரெட்டி கூறிய இந்தப் பரபரப்பான கருத்தை ஆந்திர மக்களில் பலரும் வரவேற்றுப் பாராட்டியுள்ளனர். ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதியில் தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடியின் ஏமாற்றுப் பேச்சையு

RKV

அனந்தபூர் எம்பி ஜே சி திவாகர் ரெட்டி அவரது வெளிப்படையான கருத்துக்களுக்காக பெயர் போனவர். கடந்த வாரம் ஞாயிறு அன்று தெலுங்கு தேசக் கட்சி எம்பிக்கள் சிலருடன் இணைந்து டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ அலுவலகம் முன்பு அமைதியான முறையில் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அவரையும் அவரது குழுவினரையும் காவலர்கள் வலுக்கட்டாயமாக அவ்விடத்தை விட்டு அகற்றினர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எம்பி திவாகர் ரெட்டி, பிரதமர் மோடி குறித்து சில சென்சேஷனல் கமெண்ட்களை உதிர்த்தார். 

'மோடிக்கு மக்களது பிரச்னைகளைப் பற்றித் தெரிய வேண்டுமென்றால் அவருக்க மனைவியும், குழந்தைகளும் இருந்திருக்க வேண்டும். அவருக்கு அன்பென்றால் என்னவென்றே தெரியவில்லை. அவருக்கு அன்பென்றால் என்னவென்று தெரிய குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க வேண்டும். முதலில் மக்களை எப்படி நேசிப்பது என்று அவர் கற்றுக்கொள்ளட்டும்... குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துப் பார்த்தால் தான் தெரியும் குடும்ப வாழ்க்கையின் பிரச்னைகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாழ்வில் கடந்து செல்லும் பிரச்னைகள் அனைத்தும்.'

மோடி குறித்து திவாகர் ரெட்டி கூறிய இந்தப் பரபரப்பான கருத்தை ஆந்திர மக்களில் பலரும் வரவேற்றுப் பாராட்டியுள்ளனர். ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதியில் தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடியின் ஏமாற்றுப் பேச்சையும், வாக்குறுதிகளையும் நம்பி ஏமாந்து போனவர்களான ஆந்திர மக்கள் இந்தக் கருத்தை வரவேற்று ஆர்ப்பரிப்பதில் ஆச்சர்யமில்லை என்கிறார் திவாகர் ரெட்டி.

மேலும் தனது பரபரப்பான கருத்தை மீண்டும், மீண்டும் பதிவு செய்து வரும் திவாகர் ரெட்டி மோடிக்கு மக்களது பிரச்னைகள் குறித்துப் பூரணமாகத் தெரியவேண்டுமெனில் முதலில் அவர் மனதில் நேசம் இருக்க வேண்டும். அதற்கு அவருக்கு ஒரு குடும்பமும், குழந்தையும் இருந்திருக்க வேண்டும். அப்போது தான் மக்களது பிரச்னைகள் குறித்தெல்லாம் அவரால் புரிந்து கொள்ள முடியும் என்று ஆணித்தரமாகக் கூறி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சிவகங்கைக்கு சட்டப் பேரவை உறுதி மொழிக்குழு இன்று வருகை

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவா் கைது

பிஏபி வாய்க்காலில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT