தற்போதைய செய்திகள்

டி ஜி வைஷ்ணவா கல்லூரியில் ‘பத்மஸ்ரீ’ அரவிந்த்குப்தாவின் ‘சயின்ஸ் ஷோ’ நிகழ்வு, பெற்றோர், ஆசிரியர், மாணவர்களுக்கு அழைப்பு!

RKV

ஜூலை 25 ஆம் தேதி சென்னை, அரும்பாக்கம் டி.ஜி வைஷ்ணவா கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில் பத்மஸ்ரீ அரவிந்த் குப்தாவின் சயின்ஸ் ஷோ நிகழ்வு நடைபெறவிருக்கிறது. கல்லூரியின் துவாரகா ஆடிட்டோரியத்தில் நடத்தப்படவிருக்கும் இந்த ஷோவில் பத்மஸ்ரீ அரவிந்த் குப்தாவின் இணையப்பக்கத்திலிருந்து பெறப்பட்ட 10 கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு நிகழ்வில் கலந்து கொள்வோருக்கு எளிதில் புரியும் வண்ணம் அளிக்கப்படவிருக்கின்றன. அதோடு ஹோமிபாபா சென்ட்டர் தமிழில் வெளியிட்டுள்ள எளிய அறிவியல் மொழிபெயர்ப்பு புத்தகங்களும் இங்கே கிடைக்கச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்ல, நாம் அன்றாடம் வீட்டு உபயோகத்தில் செயல்படுத்தப்பட ஏதுவான 300 எளிய அறிவியல் சோதனைகளை கல்லூரியின் இயற்பியல் துறையினர் தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளனர்.

பத்மஸ்ரீ அரவிந்த் குப்தா, ஐஐடியில் பயின்றவர். மிகச்சிறந்த அறிவியல் தன்னார்வலர் என்பதோடு அறிவியலை கிராமப்புற மாணவர்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம் எப்படி மேலும் எளிமைப்படுத்தி வழங்க முடியும்? என்பது தொடர்பான ஆய்வுகளில் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருகிறவர். இவருக்கு இந்த ஆண்டின் துவக்கத்தில் (2018 ஜனவரியில்) நடைபெற்ற குடியரசு தினவிழா அன்று இவரது சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ விருது அளித்து கெளரவித்துள்ளது மத்திய அரசு.

பத்மஸ்ரீ விருது பெற்றவரும், எளிய அறிவியலால் விதம் விதமான பொம்மைகளை உருவாக்கும் திறன் கொண்டவருமான அரவிந்த் குப்தாவை நேரில் சந்தித்து அவரது எளிய அரிய அறிவியல் சோதனைகளை நேரில் காண்பதென்பது வளரும் அறிவியல் மாணவர்களுக்கு பேராவலைத் தூண்டி அறிவியல் பாடத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கலாம்.

ஆதலால், இந்நிகழ்வுக்கு கல்லூரி சார்பாக பெற்றோர், பொதுமக்கள், மாணவ, மாணவியர், என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் நாள்: 25 ஜூலை 2018
இடம்: டி.ஜி வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT