முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் கரோனா தொற்று அறியும் கருவி

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய் கண்டறியும் கருவி நிறுவப்பட்டிருக்கிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:28 PM
பகிர்:

சிதம்பரம்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய் கண்டறியும் கருவி நிறுவப்பட்டிருக்கிறது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய் தொற்று கண்டறியும் கருவியின் சோதனை ஓட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், சிதம்பரம் உதவி ஆட்சியர் விசு மகாஜன் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 

ஆய்வின்போது அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் கிருஷ்ணமோகன், துணைவேந்தரின் ஆலோசகர் மருத்துவர் சிதம்பரம், மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் ராஜ்குமார், மருத்துவமனைக்  கண்காணிப்பாளர் மருத்துவர் சண்முகம், வட்டாட்சியர்கள் ஹரிதாஸ், பலராமன், அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் தேவேந்திரன், உதவி காவல் ஆய்வாளர் கணபதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அப்போது செய்தியாளர்களுடன் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், இதுவரை கரோனா நோய்த் தொற்று கண்டறியும் வசதியானது விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் உள்ளது. இதனால் முடிவுகள் வருவது 2-ல் இருந்து  மூன்று நாள்கள் ஆகின்றது. எனவே,  இந்த மருத்துவமனைக்கு என்னுடைய எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 32.63 லட்சம் மதிப்பில் கரோனா நோய் கண்டறியும் வைரல் டெஸ்டிங் மெஷின் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுத் தற்போது இந்தக் கருவி நிறுவப்பட்டுள்ளது என்றார்.

மேலும், இன்னும் இரண்டு நாள்களுக்குள் ஐ.சி.எம்.ஆர். (இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்) அனுமதி சான்று கிடைத்தவுடன் சிதம்பரத்திலேயே நோய் தொற்று கண்டறியும் வசதி ஏற்படும். இதன் மூலம் டெஸ்ட் எடுக்கப்பட்டவுடன் குறைந்தபட்சம் 6 மணி நேரத்தில் இருந்து அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் முடிவுகள் தெரியவரும். தற்போது இக் கருவியின் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகின்றது என்றும் பாண்டியன் குறிப்பிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →