கடலூரில் கரோனா நிவாரணம் பெறுவதற்காக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் ஏராளமான தொழிலாளர்கள் குவிந்தனர்.
தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்தவர்களுக்கு தமிழக அரசு கரோனா நிவாரணமாக ரூ. 2000 அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 1,80,000 பேரில் 69,000 பேருக்குப் புதுப்பித்தல் இல்லை, ஆதார் இணைக்கவில்லை என்று காரணம் கூறப்பட்டு நிவாரண உதவி தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்கக் கோரி கடலூரில் உள்ள தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக சிஐடியூ ஏற்பாட்டில் ஏராளமானவர்கள் குவிந்தனர்.
கூட்டம் அதிகமாக வந்த நிலையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலேயே அனைவரும் நடந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.