முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் காவல்துறையினர் 300 பேருக்கு முகக் கவசம்

சிதம்பரத்தில் சமூகஆர்வலர்கள் சார்பில் காவல்துறையினர் 300 பேருக்கு 4 அடுக்கு முகக்கவசத்தை காவல்துறை துணை கண்காணிப்பாளர் எஸ்.கார்த்திகேயன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:42 PM
முகக்கவசத்தை வழங்குகிறார் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன்
பகிர்:

சிதம்பரம் : சிதம்பரத்தில் சமூகஆர்வலர்கள் சார்பில் காவல்துறையினர் 300 பேருக்கு 4 அடுக்கு முகக்கவசத்தை காவல்துறை துணை கண்காணிப்பாளர் எஸ்.கார்த்திகேயன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

கடலூர்  மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் காவல்துறையினருக்கு, சமூக ஆர்வலர்கள் வழங்கிய 4 அடுக்கு முகக்கவசம்  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிதம்பரம் கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் எஸ்.கார்த்திகேயன் தலைமை வகித்து அனைத்து காவல் நிலையத்தினர் 300 பேருக்கு முகக்கவசங்களை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலரும் தொழிலதிபருமான முருகன், தகதமிதா யுவராஜா, பாலாஜி, திலீப், சமூக ஆர்வலர்கள் தில்லைசீனு, கருப்பு ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் சி.முருகேசன், போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் அமர்நாத், உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன், ராஜா, குமார், தியாகராஜன் மற்றும் போலீசார் பலர் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →