தற்போதைய செய்திகள்

நீட் தேர்வில் தேசிய அளவில் வெற்றி: மாணவனுக்கு கணிணி வழங்கி கௌரவிப்பு

அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் நீட்தேர்வு எழுதியதில் அகில இந்திய அளவில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த பெரியகுளம் மாணவனுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் இன்று (கணினி) வழங்கப்பட்டது.

DIN

தேனி: அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் நீட்தேர்வு எழுதியதில் அகில இந்திய அளவில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த பெரியகுளம் மாணவனுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் இன்று (திங்கள்கிழமை) டேப் (கணினி) வழங்கப்பட்டது.

சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் மோகன் தலைமை வகித்தார். பஞ்சாப் நேஷனல் வங்கியின் மதுரை மண்டலத்தலைவர் எம்.பலசுப்பிரமணியன், மதுரை வட்ட மேலாளர் கே.ஆர்.ஜெகதீஸன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவன் என்.ஜீவித்குமாரை பாராட்டி சால்வை அணிவித்து டேப் வழங்கினார்கள். மேலும் பள்ளி தலைமையாசிரியர் மோகனுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாணவனின் தாய் பரமேஸ்வரி, பஞ்சாப் நேஷனல் வங்கி மதுரை வட்ட அலுவலர் சி.பி.ஜவஹர் அமிர்தராஜ், தேனி கிளை மேலாளர் வி.ஜெயக்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT