முகப்பு
தற்போதைய செய்திகள்

திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு புதிய பதவி

மக்கள் நீதி  மய்யம் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளர் பதவியில் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு புதிய பதவி
பகிர்:

மக்கள் நீதி  மய்யம் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளர் பதவியில் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி  மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன். இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய மகேந்திரன், பத்மபிரியா உள்ளிட்டோர் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு திமுக தகவல்தொழில்நுட்ப இணைச்செயலாளர் பதவி வழங்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் சனிக்கிழமை அறிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →