தற்போதைய செய்திகள்

தா்ப்பணம் கொடுப்பதற்கு தடை: மக்கள் வருகையின்றி வெறிச்சோடிய மேட்டூர் காவிரியாற்றங்கரை

DIN


மேட்டூர்: ஆடி அமாவசையையொட்டி மேட்டூர் காவரியாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், வழிபாடுகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

மேட்டூர் காவிரியில் நீராட வருபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அனுமதியில்லை என கூறி திருப்பி அனுப்பி வைத்து வருகின்றனர்.

அனல் மின் நிலைய பாலம் பகுதியில் தடுப்புகளை அமைத்து திருப்பி அனுப்பி வரும் போலீசார்.

இதற்கு முன்னர் தடை இல்லாத காலங்களில் பல்வேறு ஊர்களிலிருந்தும், ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற முக்கிய தினங்களில் மேட்டூர் காவிரியாற்றங்கரையில்  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஏராளமானோர் வந்து செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்பொழுது காவிரியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

உள்ளூர், வெளியூர்களில் இருந்து இருசக்கர வாகனங்களில் வருபவர்களை காவேரி பாலம், மட்டம், முனியப்பன் கோவில் பகுதி, அனல் மின் நிலைய பாலம் பகுதியில் போலீசார் தடுப்புகளை அமைத்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT