தற்போதைய செய்திகள்

மேற்கு வங்கத்தில் திரையரங்குகளுக்கு அனுமதி

DIN

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மேற்குவங்கத்தில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து மேற்குவங்கத்தில் கடந்த மே 16ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பொதுமுடக்கமானது தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த கரோனா பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை மேலும் 15 நாள்களுக்கு நீட்டித்து மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி திரையரங்குகள் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நீச்சல் குளங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகள் 50 சதவிகித பயனாளர்களுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

இரவு 10.30 மணி வரை மளிகை மற்றும் பலசரக்குக் கடைகள் இயங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: 67% வாக்குப் பதிவு -தோ்தல் ஆணையம் தகவல்

கோட் படத்தின் ’போஸ்ட் ப்ரொடக்‌ஷன்’ தொடங்கியது!

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

சமுதாய நல்லிணக்கமும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

SCROLL FOR NEXT