முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆசையாய் விளையாடிய கேளிக்கைப் பூங்காவைத் தீயிட்டு அழித்த தலிபான்கள்

ஆப்கனில் தலிபான்கள் குழந்தைகள் போல விளையாடிய கேளிக்கை பூங்காக்களின் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் அவற்றை தலிபான்கள் தீயிட்டு அழித்துள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
ஆசையாய் விளையாடிய கேளிக்கைப் பூங்காவை தீயிட்டு அழித்த தலிபான்கள்
பகிர்:

ஆப்கனில் தலிபான்கள் குழந்தைகள் போல விளையாடிய கேளிக்கை பூங்காக்களின் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் அவற்றை தலிபான்கள் தீயிட்டு அழித்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படையினர் நாடு திரும்பி வரும் நிலையில், ஆப்கனை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள் ஞாயிற்றுக்கிழமை தலைநகரை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர்.

இந்நிலையில், காபூலில் உள்ள கேளிக்கை பூங்கா ஒன்றில் நுழைந்த தலிபான்கள் அங்கு குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த கேளிக்கைப் பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களில் விளையாடும் காணொலிகள் சமூக ஊடகங்களில் பரவின.

அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை தலிபான்கள் விளையாடிய கேளிக்கைப் பூங்காக்களை அவர்களே தீயிட்டு எரித்து அழித்தனர்.  சமூக வலைத்தளத்தில் தலிபான்கள் பதிவிட்ட கேளிக்கைப் பூங்காக்களை தீயிட்டு அழிக்கும் காணொலிகள் பரவி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.