திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியின் 89 ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். 
தற்போதைய செய்திகள்

கி.வீரமணி 89-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியின் 89 ஆவது பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

DIN


திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியின் 89 ஆவது பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 89-ஆம் பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கி.வீரமணியின் துணைவியார் மோனாம்மாள் ஆகியோர் உடனிருந்தனர். 

கி. வீரமணியின் 89-ஆம் பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கி.வீரமணியின் துணைவியார் மோனாம்மாள் ஆகியோர். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பெரியார் எனும் பெரும் பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பயின்ற மாணவர். பகுத்தறிவு - சுயமரியாதைப் பாடங்களைப் தெளிவாகப் பயிற்றுவிக்கும் ஆசிரியர். சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி.

கருணாநிதியின் கொள்கை இளவல். நெருக்கடி நிலைக் காலத்து சித்திரவதைகளில் என்னைத் தாங்கிப் பிடித்த சக சிறைவாசி. எந்த நெருக்கடியிலும் தெளிவான கொள்கை வழிக்காட்டிடும் திராவிடப் பேரொளி.

11 வயதில் கைகளில் ஏந்திய இலட்சியக் கொடியை 89 ஆம் அகவையிலும் உறுதியாகப் பிடித்து, வருங்காலத் தலைமுறையினரிடம் பெரியாரைப் பரப்பும் பெருந்தொண்டர். தாய்க் கழகமாம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நூறாண்டுகள் கடந்து நலமுடன் வாழ்க. தொண்டறம் தொடர்ந்திடுக.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் கொலை: கணவா் மீது வழக்குப் பதிவு

கரூர் பலி! முன்னாள் ஐபிஎஸ் அலுவலராக அண்ணாமலை என்ன சொல்கிறார்? | Bjp Annamalai | karur stampede

இரவில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ம.பி.யில் கணவருடன் கர்பா நடனமாடும்போது பெண் மயங்கி விழுந்து பலி!

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி - டிரம்ப் அறிவிப்பு

SCROLL FOR NEXT