தற்போதைய செய்திகள்

57 நாடுகளில் ஒமைக்ரான் பரவல்: உலக சுகாதார அமைப்பு தகவல்

DIN

ஒமைக்ரான் கரோனா வைரஸ் 57 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை தெரிவித்தது.

உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் பரவல் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டு வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் ஒமைக்ரான் கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஒமைக்ரான் பரவல் நிலைகள் குறித்து புதன்கிழமை பேசும்போது ஒமைக்ரான் பாதிப்புகளால் ஏற்பட்ட இறப்புகள் பதிவாகாததைக் குறிப்பிட்டார்.

மேலும் இதுவரை 57 நாடுகளில் ஒமைக்ரான் பரவல் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒமைக்ரான் பரவல் தீவிர உடல் நல பாதிப்பை ஏற்படுத்துகிறதா, அதற்கான சிகிச்சை எந்தளவுக்கு பயன் தருகிறது, தடுப்பூசி எந்தளவுக்கு செயல்படுகிறது என்பதை குறித்து அறிய கூடுதல் காலமாகலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT