தற்போதைய செய்திகள்

பஞ்சாப் தேர்தல்: பாஜகவுடன் கைகோர்த்த காங்கிரஸ் முன்னாள் முதல்வர்

DIN

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் நடந்த உட்கட்சி பூசல் காரணமாக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த அமரீந்தர் சிங் அதனைத் அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலிருந்தும் வெளியேறினார்.

மேலும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் தனிக்கட்சியையும் தொடங்கினார் அமரீந்தர் சிங். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அமரீந்தர் சிங் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியான நிலையில் அதனை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மத்திய அமைச்சரும், பஞ்சாப் மாநில பாஜக பொறுப்பாளருமான கஜேந்திர சிங் ஷெகாவத்தை சனிக்கிழமை தில்லியில் சந்தித்துப் பேசிய அமரீந்தர் சிங் பாஜகவுடான கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளார்.

7ஆம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளதாகத் தெரிவித்த அமரீந்தர் சிங் விரைவில் தொகுதி உடன்பாடு தொடங்கும் எனவும், சட்டப்பேரவைத் தேர்தலில் அமரீந்தர்-பாஜக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி எனவும் குறிப்பிட்டார்.

பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட நான்கு முனைப் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT