தற்போதைய செய்திகள்

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்றி செயல்பட டுவிட்டர் நிறுவனம் சம்மதம்

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்று அதன்படி செயல்படுவதற்கான நடவடிக்கைகளை ஈடுபட்டு வருவதாக மத்திய அரசுக்கு, டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

DIN

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்று அதன்படி செயல்படுவதற்கான நடவடிக்கைகளை ஈடுபட்டு வருவதாக மத்திய அரசுக்கு, டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து முகநூல், சுட்டுரை, வாட்ஸ்ஆஃப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில், சமீபத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, பயனாளா்களின் குறைகளைத் தீா்ப்பதற்காக உள்நாட்டிலேயே தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அந்நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டது. மேலும் பல கட்டுப்பாடுகள் புதிய விதிகள் மூலமாக நடைமுறைக்கு கொண்டு வந்தன. இதற்கு கூகுள், முகநூல் மற்றும் அதன் துணை நிறுவனமான வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத்தளங்கள் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், டுவிட்டர் நிறுவனம் மட்டும் புதிய விதிகளை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தது.

இதையடுத்து ஜூன் 5 -ஆம் தேதி பயனாளா்களின் புகாா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரியை உடனடியாக நியமிப்பது உள்ளிட்ட புதிய விதிமுறைகளை ஏற்காவிட்டால், கடும் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்குமென டுவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை ஏற்று அதன்படி செயல்படுவதற்கான நடவடிக்கைகளை ஈடுபட்டு வருவதாகவும், புகார்கள் குறித்து விசாரணை நடத்த இந்திய அதிகாரி ஒருவரை ஒப்பந்த அடிப்படையில் நியமித்துள்ளதாகவும், ஒரு வாரத்திற்குள் இதுதொடர்பான உறுதியான விவரங்களை வெளியிடப்படும்.  நாட்டில் பொது உரையாடலை எளிதாக்குவதற்கான ஒரு தளத்தை வழங்குவதன் மூலம் இந்திய மக்களுக்கு சேவை செய்வதில் உறுதியாக இருப்பதாகவும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது

இதையடுத்து இந்தியாவில் சேவையை தொடர்வதற்கான சிக்கல் விலகியுள்ளதாக தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT