எழும்பூர் தொகுதியை ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு
எழும்பூர்(தனி) தொகுதியை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கட்சித் தலைமை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எழும்பூர்(தனி) தொகுதியை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கட்சித் தலைமை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடைபெற உள்ள சட்டபேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் சார்பில் ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது.
இந்நிலையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் எழும்பூர் (தனி) தொகுதி ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எழும்பூர் தொகுதியை அதிமுகவிற்கே ஒதுக்க வேண்டும் எனக் கூறி அதிமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் வியாழக்கிழமை மாலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டணிக்குள் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக எழுந்துள்ள அதிருப்திகள் தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.