வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி: அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு 
தற்போதைய செய்திகள்

வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி: அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னையில் நடைபெற்ற அமமுக பொதுக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.

DIN

சென்னையில் நடைபெற்ற அமமுக பொதுக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.

நடைபெற உள்ள சட்டபேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. 

அதன்படி வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் சட்டபேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார். 

வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கும் அம்மா பொருளாதார புரட்சித் திட்டம், விவசாயிகளுக்கு உரம் உள்ளிட்ட இடுபொருள்களை வீடு தேடி வழங்கும் திட்டம்  உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் எஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, அமமுக கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT