தற்போதைய செய்திகள்

திருத்துறைப்பூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் முன்னிலை

DIN


திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 7 சுற்றுகளின் முடிவில் 13,265 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து முன்னிலையில் உள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்தது.

இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக கடந்த கருத்துக்கணிப்பிலும், பிந்தைய கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என தெரிவித்துள்ள நிலையில்,  நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தற்போது வரை திமுக கூட்டணி கட்சிகள் முன்னிலை பெற்று வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் 113 தொகுதியில் திமுக முன்னிலையில் உள்ளது. ஆனால் அதிமுக 83 தொகுதிகளில் முன்னிலை உள்ளது.

இந்நிலையில், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து முன்னிலையில் உள்ளார்.

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 7 சுற்றுகள் எண்ணப்பட்டுள்ளன. 7 -ஆவது சுற்று முடிவில் 13, 265 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய மாரிமுத்து முன்னிலையில் உள்ளார்.

திருத்துறைப்பூண்டி தொகுதி 7 -ஆவது சுற்று முடிவு
மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்) - 31,280
சுரேஷ்குமார் (அதிமுக) - 18015

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT