முகப்பு
தற்போதைய செய்திகள்

‘இது வெள்ளை அறிக்கை அல்ல, மஞ்சள் கடுதாசி’: கமல்ஹாசன் விமர்சனம்

தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்டது வெள்ளை அறிக்கை அல்ல மஞ்சள் கடுதாசி என மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
‘இது வெள்ளை அறிக்கை அல்ல, மஞ்சள் கடுதாசி’: கமல்ஹாசன் விமர்சனம்
பகிர்:

தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்டது வெள்ளை அறிக்கை அல்ல மஞ்சள் கடுதாசி என மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு  மாநில நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

தமிழ்நாடு அரசின் இந்த வெள்ளை அறிக்கை குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளை அறிக்கை தொடர்பாக மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது சுட்டுரைப் பதிவில்,  “கஜானா காலி எனினும் சுரண்டல் சற்றும் தளர்வின்றி நடைபெறும் என்பதையே அறிக்கை விளக்குவதாக எனக்குத் தோன்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  “இது வெள்ளை அறிக்கை இல்லை. மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம்” என அவர் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.