தற்போதைய செய்திகள்

சென்னையில் 2வது விமான நிலையம்: 2 இடங்கள் இறுதி

DIN


சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் இரண்டு இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். 

போபால் - சென்னை இடையேயான நேரடி விமான சேவையை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் தொடக்கிவைத்தனர்.

பின்னர் பேசிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இரண்டாவது விமான நிலையம் தேவை என்பதை கருத்தில் கொண்டு சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தில்லிக்கு ரூ.38,000 கோடி செலவில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.  அதேபோல் மும்பையில் இரண்டாவது விமான நிலையம் நவி மும்பையில் ரூ.17,000 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.

சென்னைக்கும் இரண்டாவது விமான நிலையத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.  அதற்காக மாநில அரசு சார்பில் நான்கு இடங்கள் பரிந்துரை செயப்பட்டுள்ளன. இதில் இரண்டு இடங்களைத் தேர்ந்தெடுத்து மாநில அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT