தற்போதைய செய்திகள்

டி20 உலக கோப்பை: ஆப்கனை வீழ்த்தியது இங்கிலாந்து

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

DIN

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹசரதுல்லா ஷசாய் மற்றும் ரஹமனுல்லா குர்பாஸ் களமிறங்கினர். இந்த இணை பெரிதாக ரன் சேர்க்கவில்லை. 

ஷசாய் 7 ரன்களிலும், ரஹமனுல்லா 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, இப்ரஹீம் ஷத்ரன் மற்றும் உஸ்மான் கானி ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியது. நிதானமாக விளையாடிய இப்ரஹீம் 32 ரன்கள் குவித்து சாம் கரண் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய நஜிபுல்லா 13 ரன்களிலும், கேப்டன் முகமது நபி 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

இதனால், அந்த அணி 91 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்வரிசையில் களமிறங்கிய வீரர்களும் பெரிதாக ரன் ஏதும் குவிக்கவில்லை. அஸ்மதுல்லா 8 ரன்களிலும், ரஷீத் கான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ரன் ஏதும் குவிக்காமலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களின் முடிவில் 112 ரன்கள் மட்டுமே குவித்தது.

இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கரண் வெறும் 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியில் ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பட்லர் 18 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த டேவிட் மலான் நிதனமாக ஆடினார். 

மற்றொரு புறம் ஹேல்ஸ் 19 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து களம்கண்ட பென் ஸ்டோக்ஸ் ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மலான் 30 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இறுதியில் வந்த லியம் லிவிங்ஸ்டன் பொறுப்புடன் விளையாடி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவினார். 

18.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு இங்கிலாந்து வெற்றி இலக்கை எட்டியது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

SCROLL FOR NEXT