முகப்பு
தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை மிகவும் அவசியம்: ஆம் ஆத்மி

அதிகரித்துவரும் விலைவாசி, வேலையின்மைப் பிரச்னைகளுக்காக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது  என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:21 PM
அரசு அமைப்புகளை எதிர்க்கட்சிகள் மீது ஏவிவிடும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!
பகிர்:

அதிகரித்துவரும் விலைவாசி, வேலையின்மைப் பிரச்னைகளுக்காக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது  என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதி தில்லியில் வரும் டிச. 6 ஆம் தேதி, புதன்கிழமை இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போன்றோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இயலாதெனத் தெரிவித்துள்ள நிலையில் ஒற்றுமைக்கான அழைப்பை ஆம் ஆத்மி விடுத்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான உத்திகள் தொடர்பாக விவாதிப்பதற்காகக் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து, மூன்றாவது வாரத்தில் அடுத்த சுற்றுக் கூட்டம் நடைபெறும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்குமா என்று கேட்டபோது, அனேகமாகக் கூட்டம் ஒத்திவைக்கப்படலாம். இதுவரையிலும் தகவலேதுமில்லை. ஆனால், ஒனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதில் ஆம் ஆத்மி உறுதியாக இருக்கிறது என்று கட்சியின் எம்எல்ஏ துர்கேஷ் பாதக் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →