தற்போதைய செய்திகள்

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவு

DIN

டோக்கியோ (ஜப்பான்): ஜப்பானிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், ஜப்பானின் வடக்கு கடற்கரையான ஹொன்ஷுவில் வியாழக்கிழமை காலை 8.46 மணிக்கு 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தைவானின் தெற்குக் கடலோர நகரான ஹுவாலியனுக்கு சுமார் 18 கி.மீ. தெற்கு-தென்மேற்கே, 34.8 கி.மீ. ஆழத்தில் புதன்கிழமை காலை 7.58 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 5.28 மணி) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.4 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும், 7.2 அலகுகளாகப் பதிவானதாக தைவானின் மத்திய காலநிலை ஆய்வு நிறுவனமும் தெரிவித்தன.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 44 பின்னதிர்வுகள் ஏற்பட்டன. அவை ரிக்டர் அளவுகோலில் அதிகபட்சமாக 6.4 அலகுகள் வரை பதிவாகின.

அந்தத் தீவு கடந்த 25 ஆண்டுகளில் சந்தித்திராத மிக சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தைச் தொடர்ந்து ஜப்பானிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஜப்பானின் வடக்கு கடற்கரையான ஹோன்ஷூவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் வியாழக்கிழமை காலை 8.46 மணிக்கு 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 55 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதேபோன்று 40 கி.மீ ஆழத்தில் டோக்கியோவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் பொருள் சேதங்கள், உயிர்ச்சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் சந்தித்திராத மிக சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 10 பேர் பெண்கள் மற்றும் 10 பேர் ஆண்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

SCROLL FOR NEXT