தற்போதைய செய்திகள்

தெலங்கானாவில் தண்ணீர் தொட்டியில் செத்து மிதந்த 30 குரங்குகளின் சடலங்கள்!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் 30 குரங்குகள் செத்து மிதந்துள்ளதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர்.

DIN

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் 30 குரங்குகள் செத்து மிதந்துள்ளதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர்.

தண்ணீர் தொட்டியில் குரங்குகள் தண்ணீர் குடிக்க முயன்றபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம், நந்திகொண்டா பேரூராட்சி முதல் வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டு அதிலிருந்து மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, அருகில் வசித்தவர்கள் பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர், அங்கு வந்த பேரூராட்சி ஊழியர்கள் தொட்டியை திறந்து பார்த்தபோது, தொட்டிக்குள் 30-க்கும் மேற்பட்ட குரங்குகள் அழுகிய நிலையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், மக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்டு வந்த தண்ணீரை உடனடியாக நிறுத்திவிட்டு குரங்குகளின் சடலங்களை அப்புறப்படுத்தி தண்ணீரை வெளியேற்றினர்.

மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியின் மூடி மூடப்படாததால், குரங்குகள் தண்ணீர் குடிக்க முயன்றபோது தவறி விழுந்த குரங்குகள் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!

உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

2025-ல் மட்டும் 600-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள்! எங்கு தெரியுமா?

இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT