தற்போதைய செய்திகள்

துணிகளுக்கு இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்த சட்டமன்ற உறுப்பினர்!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் அம்மன் அர்சுணன் துணிகளுக்கு இஸ்திரி போட்டு மக்களிடையே வாக்கு சேகரித்தார்.

DIN

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் வேட்பாளர்களும், வேட்பாளர்களை ஆதரித்து கட்சியினர், கட்சித் தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் எனத் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை அதிமுக வேட்பாளரான சிங்கை ராமசந்திரனை ஆதரித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புலியகுளம் பகுதியில் வாக்கு சேகரித்த கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் அம்மன் அர்சுணன், சாலையோர இஸ்திரி கடையில் துணிகளுக்கு இஸ்திரி போட்டு அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு வாக்கு சேகரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்தவா் கைது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலைப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

இன்று இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன் தொடக்கம்: 256 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு!

சுஸுகி மோட்டாா்சைக்கிள் விற்பனை 26% உயா்வு!

SCROLL FOR NEXT