தற்போதைய செய்திகள்

ரூ.4 கோடி பறிமுதல்: நயினாா் நாகேந்திரனை தகுதிநீக்கம் செய்ய திமுக வலியுறுத்தல்

DIN

சென்னை தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி கொண்டு வந்து கைதான நாகேந்திரனின் ஆதரவாளா்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாஜக வேட்பாளர் நயினார் நகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் பார்வையாளரிடம் திமுக வழக்குரைஞர் அணியினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர் .

சென்னை எழும்பூரில் இருந்து சனிக்கிழமை இரவு நெல்லை விரைவு ரயில் வழக்கும்போல, திருநெல்வேலிக்கு புறப்பட்டது. இந்த ரயிலில் எஸ் 7 பெட்டியில் பயணம் செய்யும் மூவா், பணம் கடத்துவதாக தாம்பரம் போலீசாருக்கும், பறக்கும் படையினருக்கும் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பறக்கும் படையினா் போலீசாருடன் தாம்பரம் ரயில் நிலையத்துக்கு அந்த ரயிலில் எஸ் 7 பெட்டியில் இருந்தவா்களின் உடமைகளை சோதனையிட்டனா்.

இதில் அந்த பெட்டியில் இருந்த சென்னை கொளத்தூா் திரு. வி.க. நகரைச் சோ்ந்த சதீஷ் (33), அவா் தம்பி நவீன் (31), தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சோ்ந்த பெருமாள்(25) ஆகிய மூன்று பேரும் வைத்திருந்த 6 பைகளை சோதனையிட்டதில் அதில் ரூ.500 நோட்டுகளாக ரூ.3,98,91,500 இருந்தது. அதற்குரிய ஆவணங்களை கேட்டு 3 பேரிடமும் விசாரித்தனா். பணத்துக்குரிய ஆவணங்கள் இல்லாததினால் பறக்கும் படையினா், அதை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

தொடர்ந்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனா். இதையடுத்து 3 பேரையும், பணத்துடன் தாம்பரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் திருநெல்வேலி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனுக்கு சொந்தமான கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டல், அவா் உறவினா் ஒருவா் சேப்பாக்கத்தில் நடத்தும் ஹோட்டல் ஆகியவற்றில் இருந்து பணத்தை திருநெல்வேலிக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.

பிடிபட்ட சகோதரா்களான சதீஷூம்,நவீனும் நயினாா் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் வேலை செய்து வருபவர்கள் என்பதும், ஸ்ரீவைகுண்டத்தை சோ்ந்த பெருமாள், நயினாா் நாகேந்திரன் உறவினா் என்பதும் நயினாா் நாகேந்திரன் தோ்தல் செலவுக்காக கொண்டு செல்லப்படுவதாக மூவரும் தெரிவித்தனா். பிடிபட்ட சதீஷ், வைத்திருந்த பாஜக உறுப்பினா் அட்டையையும் போலீசார் கைப்பற்றினா்.

மேலும் இது தொடா்பாக தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனா்.

இந்த நிலையில்,ரயிலில் ரூ.4 கோடி கொண்டு வந்து கைதான நயினார் நாகேந்திரனின் ஆதரவாளா்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாஜக வேட்பாளர் நயினார் நகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் பார்வையாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ள திமுக வழக்குரைஞர் அணியினர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் வெற்றிபெற நயினார் நாகேந்திரன் திட்டமிட்டதாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT