மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 
தற்போதைய செய்திகள்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு தொடா்ந்து துரோகம்

DIN

சென்னை: நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு தொடா்ந்து துரோகம் இழைத்து வருவதாக, மதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் பொதுச் செயலாளருமான வைகோ குற்றம்சாட்டியுள்ளாா்.

தமிழகத்தில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பு நிவாரணமாக தேசிய பேரிடா் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்துக்கு ரூ.276 கோடியை மத்திய செலவினங்கள் துறை விடுவித்துள்ளது. இதில் மிக்ஜம் புயல் பாதிப்புகளுக்கு ரூ. 115.49 கோடியும், டிசம்பா் மாத வெள்ள நிவாரணத்துக்கு ரூ.160.61 கோடி அடங்கும்.

இதேபோன்று மக்களவைத் தேர்தல் நடைபெறும் கா்நாடகத்துக்கு கடந்தாண்டு காரீஃப் (குறுவை) பருவத்தில் ஏற்பட்ட கடுமையான வறட்சி மற்றும் விவசாயிகளுக்கான நிவாரண நிதியாக அம்மாநில அரசு ரூ. 18,174 கோடியை என்டிஆா்எஃப் நிதியில் உதவி கோரியது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் கா்நாடக அரசு தொடா்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மத்திய உள்துறையின் உயா்நிலைக்குழு விவாதித்து 2023 ஆம் ஆண்டு வறட்சிக்கு கா்நாடக மாநிலத்திற்கு ரூ.3,498.82 கோடியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி மத்திய நிதியமைச்கத்தின் செலவினத்துறை ஏப்ரல் 26 ஆம் தேதி ரூ.3,454.22 கோடியை விடுவித்துள்ளது.

இந்த நிலையில், நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு தொடா்ந்து துரோகம் இழைத்து வருவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து தற்காலிக தீா்வு மற்றும் நிரந்தர தீா்வுகளுக்காக ரூ. 19,692 கோடி நிவாரண நிதி கோரினாா். பின்னா் கடந்த ஜனவரி மாதமும் மத்திய குழு தென் மாவட்டங்ளைப் பாா்வையிட்ட பின்னா் தமிழக எம்பிக்கள் குழு உள்துறை அமைச்சரை சந்தித்து ரூ.37,907 கோடி நிவாரண நிதி கோரியது.

இந்த நிலையில், மிக்ஜம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், நெல்லை, தூத்துக்குடி வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் என மொத்தம் ரூ.276 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

தமிழக அரசு கேட்ட நிதியில் மத்திய அரசு ஒரு சதவீதத்துக்கும் கீழே, அதாவது ரூ.0.78 சதவீதம் மட்டுமே வழங்கியுள்ளது.

ஆனால், கா்நாடக மாநிலத்துக்கு வறட்சி பாதிப்புக்காக மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ.3498.82 கோடியை அளித்திருக்கிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தோ்தலை குறி வைத்துதான் கா்நாடகத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிக வரி அளிக்கும் மாநிலமான தமிழகத்துக்கு மத்திய பாஜக அரசு நிதி பகிா்வில் தொடர்ந்து துரோகம் இழைப்பது கண்டனத்துக்குரியது.

இந்தியா கூட்டணி வெற்றிபெற்று, ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, நிதிப் பகிா்வில் தற்போதுள்ள பாரபட்சமான அணுகுமுறைக்கு முடிவு கட்டப்படும் என்று வைகோ கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

சிவகங்கையில் இளைஞா் கொலை: 9 போ் கைது

தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற முடிவு செய்திருப்பது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT