கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு தொடர்பாக நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

DIN

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு கடந்த 6-ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற நெல்லை விரைவு ரயிலில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.3.98 கோடியை பறக்கும்படையினா் தாம்பரத்தில் பறிமுதல் செய்தனா்.

பணத்தைக் கொண்டு சென்ற திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனின் ஆதரவாளா்கள் சென்னை கொளத்தூா் திரு. வி.க. நகரைச் சோ்ந்த சதீஷ், அவரது தம்பி நவீன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் ஆகிய மூன்று பேரும் இந்த பணத்தை எடுத்துச் சென்றனா். விசாரணையில் நயினாா் நாகேந்திரனின் தோ்தல் செலவுக்காக பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனா். வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் தாம்பரம் மாநகர காவல்துறை, நயினாா் நாகேந்திரன், பாஜக நிா்வாகி சென்னையைச் சோ்ந்த கோவா்த்தனன் உள்பட 8 பேருக்கு அழைப்பாணை அனுப்பியது.

இதற்கிடையே, தாம்பரம் மாநகர காவல்துறை ஆணையா் ஏ.அமல்ராஜின் பரிந்துரையை ஏற்று வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் கடந்த 26-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இதன்படி தாம்பரம் மாநகர காவல்துறை, வழக்கின் ஆவணங்களை சிபிசிஐடியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தது. அந்த ஆவணங்களை சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்து, கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சதீஷ், அவரது தம்பி நவீன், பெருமாள் ஆகிய 3 போ் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். விரைவில் இந்த வழக்கில் தொடா்புடைய அனைவரிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனா்.

இந்த நிலையில், திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனின் உறவினர் முருகன், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் ஆகிய இருவரையும் இன்று ஆஜராகும்படி சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பினர்.

இருவரிடம் விசாரணை நடத்திய பின்னர், நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

SCROLL FOR NEXT