கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மே நாளையொட்டி மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

DIN

மே நாளையொட்டி புதன்கிழமை (மே. 1) ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில், நாளை (மே. 1) மே நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதனால், சென்னை மெட்ரோ ரயில்கள் நாளை ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணையின் படி இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

2. காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

3. காலை 5 முதல் 8 மணி வரை, பகல் 11 மணி முதல் 5 மணி வரை, இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி கார் வெடிப்புக்கு ஆதரவு? சமூக வலைதளங்களை கண்காணிக்க அறிவுறுத்தல்

முதல் ஒருநாள்: சதம் விளாசிய சல்மான் அகா; இலங்கைக்கு 300 ரன்கள் இலக்கு!

பிசி ஜுவல்லர் 2-வது காலாண்டு லாபம் 17% உயர்வு!

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெருவெற்றி? பிகார் வாக்குப்பதிவு கருத்துக் கணிப்புகள் பலிக்குமா?

ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தாத ஆர்ச்சர்..! ஆஷஸ் தொடரில் நிறைவேற்றுவாரா?

SCROLL FOR NEXT