மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் இரண்டு மாநிலங்களும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்பது தற்கொலைக்கு சமம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூர்-இலத்தேரி இடையே, ரூ. 29 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் 38 முறை பேசியும் சுமுகமான முடிவு எட்டப்படாத நிலையில் நடுவர் மன்றத்திற்கு சென்றோம்.
நேரடியாகவே பட்டேலும்-கலைஞரும் பிரதமராக இருந்த தேவகெளடாவை வைத்துக்கொண்டே 3 நாள்கள் பேசினோம் அப்போதும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை.
பேச்சுவார்த்தையால் இந்த பிரச்னை தீராது என்பதனால், முடிவை மத்திய அரசுக்கு அனுப்பினோம். அதன்பின்னே வி.பி.சிங் அவர்கள் நடுவர் மன்றம் அமைப்பதாக உறுதியளித்தார்.
இந்த நிலையில், இப்போது தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தினால் கர்நாடக அரசு ஒத்துழைக்காது, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றால் இரண்டு வருடங்களுக்கு காலதாமதம் ஆகும். அப்போது கர்நாடக அரசு பேச்சு வார்த்தையில் தீர்த்துகொள்கிறோம் என்று சொல்லும், அப்போது அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து அனுப்பிவிடும், பின்பு பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக அரசு அழைக்காது.
இந்த நிலையில், பிரதமர் மோடி இரண்டு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தையில் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது தற்கொலைக்கு சமம்" ஆகும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.