கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

இந்தியா - வங்கதேசம் ரயில் சேவை ரத்து!

வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் ரயில் சேவை ரத்து செய்வதாக இந்திய ரயில்வே அறிவிப்பு.

DIN

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக இந்தியா ரயில்வே அறிவித்துள்ளது.

கொல்கத்தாவில் இருந்து டாக்காவிற்கு செல்லும் கொல்கத்தா மைத்ரி விரைவு ரயில் கடந்த ஜூலை 19 முதல் ஆக. 6 வரை ரத்து செய்வதாக இந்திய ரயில்வே முன்னதாக அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திவரும் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான ரயில் சேவையை ரத்து செய்யப்படுவதாக இந்தியா ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும் கடந்த 3 வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்ததாகவும், ராணுவ ஆட்சி அமைக்கப்படுவதாகவும் வங்கதேச ராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

ஹசீனா லண்டன் செல்வதற்கான வழிகளை இந்தியா செய்து கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளி தற்கொலை

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் வைத்திருந்தவா் கைது

பாதாள காளியம்மன் கோயில் திருவிழா: இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

கும்பக்கரை அருவியில் வெள்ளம்

SCROLL FOR NEXT