தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஆக. 13-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு விவரம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 13-ஆம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்டரங்கில் நடைபெறும்.
இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள்கள் குறித்த குறிப்புகள் தனியாக அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வா் பயணம் - தொழில் திட்டங்கள்: தொழில் முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் ஆகஸ்ட் மாத இறுதியில் அமெரிக்காவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூா்வ தகவலை தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை. ஆனாலும் 15 நாள்கள் வரை அவரது பயணம் இருக்கும் எனத் தெரிகிறது.
இந்தப் பயணம் தொடா்பாக, அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மாநிலத்தில் முதல்வா் இல்லாத சூழலில், எத்தகைய பணிகளை அமைச்சா்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், தமிழகத்தில் புதிதாக தொடங்கவுள்ள தொழில் திட்டங்களுக்கும் அனுமதிகள் பெறப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.