முகப்பு
மேட்டூர் அணை.
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணையில் நீர் திறப்பு 10,000 கன அடியாக குறைப்பு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.00 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி,யாகவும் உள்ளது.

தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணையில் நீர் திறப்பு 10,000 கன அடியாக குறைப்பு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.00 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி,யாகவும் உள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 4:26 AM
மேட்டூர் அணை.
பகிர்:

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை கடந்த மாதம் 30ஆம் தேதி எட்டியது.

இதனையடுத்து அணையின் பாதுகாப்புக் கருதி 16 கண் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அதிகபட்சமாக உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 1.48 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறையத் தொடங்கியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 22,000 கன அடியாக இருந்தது.

இதில் நீர்மின் நிலையங்கள் வழியாக 17,500 கன அடியும், உபரி நீர் போக்கி வழியாக 4,500 கன அடியும் திறக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,000 கன அடியாக குறைந்ததையடுத்து, 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டு வந்த தண்ணீர் 8 நாள்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது.

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.00 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி,யாகவும் உள்ளது.

அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடியும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →