தமிழகத்தில் 56 காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது
தமிழகம் முழுவதும் உள்ள 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது
அதன்படி, மதுரை தெற்கு மண்டல அமலாக்கத்துறை காவல் கண்காணிப்பார் சுஜித் குமார், சென்னை துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த நிஷா, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக செல்வரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மேலும் 32 காவல் துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநில மனித உரிமைகள் ஆணையரக காவல் கண்காணிப்பாளராக ஜெயலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை தீவிரவாத தடுப்புப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக வி.பத்ரி நாரயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.