காதலே காதலே படம் எக்ஸ்
தற்போதைய செய்திகள்

நடிகர் மஹத்தின் காதலே காதலே படத்தின் அறிவிப்பு விடியோ!

மஹத்துக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்.

DIN

நடிகர் மஹத்தின் நடிக்கும் காதலே காதலே படத்தின் அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. இவர் மங்காத்தா, ஜில்லா, 600028 - 2, மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர், தற்போது காதலே காதலே எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே.எஸ்.ரவிக்குமார், விடிவி கனேஷ், ரவீனா ரவி உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை பிரேம் நாத் எழுதி இயக்குகிறார். கீதா கோவிந்தம் படத்துக்கு இசையமைத்த விஷால் சந்திரசேகர் இப்படத்துக்கு இசையமைக்க, ஸ்ரீ வாரி பிலிம் தயாரிக்கிறது. இப்படத்தின் பாடல் உரிமையை சரிகமா நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்நிலையில், காதலே காதலே படத்தின் அறிவிப்பு விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், இப்படத்தின் டிரைலர், வெளியீட்டுத் தேதி குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”துறை சார்ந்த அமைச்சர்கள் யாரும் இதுவரை வரவில்லை!” | தொடரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்!

ஆயில் இந்தியா லாபம் 1.4% ஆக உயர்வு!

மாநிலங்களவையிலும் வருமான வரி மசோதா-2025 நிறைவேற்றம்!

குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் இரு மசோதாக்கள்!

நடிகர் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்..! உறவினர் பகிர்ந்த விஷயம்!

SCROLL FOR NEXT