தற்போதைய செய்திகள்

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலா் நா.முருகானந்தம்?

தமிழக அரசின் 50-ஆவது தலைமைச் செயலாளராக முதல்வரின் செயலாளர்களில் ஒருவரான நா.முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

DIN

தமிழக அரசின் தற்போதைய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் 50-ஆவது தலைமைச் செயலாளராக முதல்வரின் செயலாளர்களில் ஒருவரான நா.முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையைச் சோ்ந்தவரும், பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரியான முருகானந்தம், 1991-ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணித் தேர்வில் தோ்ச்சி பெற்றார்.

கடந்த 2001 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராகவும், ஊரக வளா்ச்சித் துறையின் இணைச் செயலா், தில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையா், தொழில் துறை, நிதித் துறைகளின் செயலாளா் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளாா்.

தற்போது கூடுதல் தலைமைச் செயலா் பொறுப்பில் முதல்வரின் தனி பிரிவுச் செயலாளா் 1-ஆக பணியில் இருந்து இவர், தமிழக அரசின் தலைமைச் செயலராக நியமனம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லறையிலும் க்யூஆர் கோடு! நினைவலைகளைப் புதுப்பிக்க புதிய முயற்சி!!

ஓவல் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! ஜஸ்பிரீத் பும்ரா, கம்போஜ் நீக்கம்!

லண்டன் வரை... கூலி புரமோஷன் தீவிரம்!

3.6 கோடி சொத்துக்காக சண்டையிட்ட பிள்ளைகள்! கடைசியாக தெரிய வந்த உண்மை!!

பயங்கரவாதம் ஒருபோதும் காவி நிறத்தில் இருந்ததில்லை, இனியும் இருக்காது: ஃபட்னவீஸ்

SCROLL FOR NEXT