கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

மதுரை - செங்கோட்டை ரயில் நேரம் 4 நாள்களுக்கு மாற்றம்!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் காரணமாக மதுரை - செங்கோட்டை பயணிகள் விரைவு ரயிலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

DIN

மதுரை: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் காரணமாக மதுரை - செங்கோட்டை பயணிகள் விரைவு ரயிலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதையொட்டி, ஆக. 26, 27 மற்றும் செப். 8, 9 ஆகிய தேதிகளில் ராஜபாளையம்- சங்கரன்கோவில் இடையேயான ரயில் போக்குவரத்து காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.20 மணி வரை தடை செய்யப்படுகிறது.

இதனால், மேற்கண்ட 4 நாள்களிலும் செங்கோட்டை- மதுரை பயணிகள் விரைவு ரயில் (06664) செங்கோட்டையிலிருந்து பிற்பகல் 12.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 50 நிமிடம் தாமதமாக 1 மணிக்குப் புறப்படும்.

ராஜபாளையத்தில் இருந்து பிற்பகல் 2.10 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு மதுரை சென்று சேரும்.

இதன்படி பயணிகள் தங்களது பயணத்திட்டத்தை அமைத்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

சூடான உணவுப் பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT