சுட்டுக்கொல்லப்பட்ட யுனைடெட் ஹெல்த் கேரின் சிஇஓ பிரையன் தாம்சன். 
தற்போதைய செய்திகள்

பிரபல காப்பீட்டு நிறுவனத்தின் சிஇஓ சுட்டுக்கொலை!

நியூயார்கில் பிரபல காப்பீட்டு நிறுவனத்தின் சிஇஓ சுட்டுக்கொலை செய்யப்பட்டதைப் பற்றி...

DIN

நியூயார்க்: அமெரிக்காவில் நிறுவன முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற யுனைடெட் ஹெல்த்கேரின் சிஇஓ பிரையன் தாம்சன் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தை சார்ந்த சர்வதேச நிறுவனம் யுனைடெட் ஹெல்த் குழுமத்தின் கிளை நிறுவனமான யுனைடெட் ஹெல்த் கேர் 4.90 கோடி அமெரிக்கர்கள் பயன்பெறும் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டு நிறுவனமாகும்.

இதன் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பிரையன் தாம்சன் (வயது 50). இவர் புதன்கிழமை காலை 6.45 மணியளவில் மேன்ஹேட்டனிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக வந்தப் பொழுது, அவரை அந்த ஹோட்டலின் வெளியே அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார்.

உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அந்த மர்ம நபர் பிரையனை கொலைச் செய்ய திட்டமிட்டு அங்கு காத்திருந்ததும், பிரையன் அந்த ஹோட்டலுக்குள் நுழைய நடந்து சென்றப் பொழுது தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை பலமுறை சுட்டுவிட்டு தப்பியோடியதும் நியூயார்க் நகர போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தில் இணைந்த பிரையன் தாம்சன், 2021ஆம் ஆண்டு முதல் யுனைடெட் ஹெல்த் கேரின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். 50 வயதாகும் பிரையனுக்கு மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.

அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளியை தேடி வரும் நியூயார்க் நகர போலீஸார், கொலையாளி குறித்து தகவல் தருபவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் சன்மானமாக வழஙப்படும் என்று அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு! மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

மேட்டூர் அணை: தண்ணீர் திறப்பு குறைப்பு!

விராலிமலை: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

SCROLL FOR NEXT