ஜோர்டான்: தலைநகர் அம்மானில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 முதியவர்கள் பலியானார்கள். மேலும், 60 பேருக்கு தீக்காயம் எற்பட்டுள்ளது.
அம்மானிலுள்ள தனியாருக்குச் சொந்தமான முதியோர் இல்லத்தில் சுமார் 111 முதியவர்கள் வசித்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், இன்று (டிச.13) அதிகாலை அந்த முதியோர் இல்லத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தினால் 6 முதியவர்கள் பலியான நிலையில், 55 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது.
இதுகுறித்து அந்நாட்டு சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் வஃபா பனி முஸ்தஃபா கூறுகையில், ”படுகாயம் அடைந்த முதியவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மீதமுள்ளவர்கள் வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், இந்தத் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.