மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,198 கன அடியாக குறைந்துள்ளது. 
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நீர் திறப்பு காலம் நீட்டிப்பு!

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு காலம் சனிக்கிழமை(டிச.14) முதல் மேலும் 33 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அணை நீர்மட்டம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 6,384 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,198 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 117.31 அடியிலிருந்து 117.57 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 89.64 டிஎம்சியாக உள்ளது.

மழையளவு 13.2 மி.மீ பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்து திணறல் (79/7): பாகிஸ்தானின் முதல் வெற்றியைத் தட்டிப்பறிக்கும் மழை!

பழம்பெரும் பாடகி பாலசரஸ்வதி தேவி காலமானார்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 75 காசுகள் உயர்ந்து ரூ.88.06 ஆக நிறைவு!

கால்பந்து - கிரிக்கெட் சங்கமம்: லிவர்பூல் வீரரை மீன் குழம்புடன் வரவேற்கும் சஞ்சு சாம்சன்!

நோக்கு வர்மம்... கேதரின் தெரசா!

SCROLL FOR NEXT