கோப்புப்படம்  
தற்போதைய செய்திகள்

டிராக்டர் டிராலி தலைக்குப்புற கவிழ்ந்ததில் 3 பேர் பலி!

பிகாரில் டிராக்டர் டிராலி தலைக்குப்புற கவிழ்ந்ததில் 3 பேர் பலியாகியுள்ளதைப் பற்றி..

DIN

பிகாரில் நெடுஞ்சாலையில் சென்ற டிராக்டர் டிராலி தலைக்குப்புற கவிழ்ந்ததில் 3 பேர் பலியாகினர்.

இன்று காலை பிகார் மாநிலம் ககாரியா மாவட்டத்திலுள்ள சைத்தா கிராமத்தின் அருகில் தேசிய நெடுஞ்சாலை 31இல் சென்றுக்கொண்டிருந்த டிராக்டரின் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதாக கூறப்படுகின்றது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டரின் டிராலி தலைக்குப்புற கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 3 பெண்கள் பலியாகினர். மேலும், அந்த வாகனத்தின் அடியில் சிக்கிக்கொண்ட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் விபத்துக்குள்ளான டிராக்டரை கைப்பற்றி தப்பியோடிய ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரை மேல்... அதிதி ராவ் ஹைதரி!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

காலை இளங்காற்று... பிரணிதா சுபாஷ்!

ஒரு வார இடைவெளிக்குப் பின் சென்னையில் திடீர் கனமழை: வெய்யிலின் தாக்கம் குறைந்தது!

ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT