தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றம் வரை சென்ற காங்கிரஸின் வன்முறை: கங்கனா

பாஜக எம்பிக்கள் காயமுற்றது தொடர்பாக கங்கனா ரணாவத்.

DIN

காங்கிரஸின் வன்முறை செயல்கள் இன்று நாடாளுமன்றம் வரை சென்றுள்ளதாக பாஜக எம்பி கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை காலை மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், காங்கிரஸுக்கு எதிராக பாஜக எம்பிக்களும் போராட்டம் நடத்தினர்.

இதில், ராகுல் காந்தி தள்ளியதில் பாஜக எம்பிக்கள் பிரதாப் சிங் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பாஜக எம்.பி.க்கள் தள்ளியதால் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகார் கடிதம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கண்டித்து மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த நிலையில் பாஜக எம்பிக்கள் காயமுற்ற சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய பாஜக எம்பி கங்கனா ரணாவத், “பாஜக எம்பி ஒருவருக்கு தையல் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் அம்பேத்கர் அல்லது அரசியல் சாதனம் குறித்து காங்கிரஸ் பரப்பும் பொய் பிரச்சாரங்கள் முறியடைக்கப்படுகின்றன. அவர்களின் வன்முறை செயல்கள் இன்று நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது” என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் உள்பட 3 போ் கைது

தில்லி, உ.பி.யில் போலீஸாா் அதிரடி சோதனை: ரூ.30 லட்சம் ஹெராயினுடன் 2 போ் கைது!

பீதம்புராவில் 3 மெட்ரோ நிலையங்களின் பெயா் மாற்றம்: தில்லி முதல்வா் அறிவிப்பு!

பட்டதாரி ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வு: மாவட்டத்தில் 9,176 போ் எழுதினா்

அரியலூரில் 97% எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்

SCROLL FOR NEXT