முகப்பு
தற்போதைய செய்திகள்

நேபாளத்தில் நிலநடுக்கம்!

நேபாளத்தில் வியாழக்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 11:11 AM
நேபாளத்தில் நிலநடுக்கம்!
பகிர்:

நேபாளத்தில் வியாழக்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டா் அளவுகோலில் 4.1 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பொருள் சேதமோ, உயிர்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் தெரியவந்துள்ளது.

இந்திய நேரப்படி இன்று(டிச. 19) காலை 7.22 மணி அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

கடந்த டிச. 17-ல் பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாடூ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

தொடர்ந்து, இதன் காரணமாக சுனாமி சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.