கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

இன்று விண்ணில் பாய்கிறது தென்கொரியாவின் 3வது ராணுவ செயற்கைக்கோள்!

தென்கொரியாவின் 3வது ராணுவ செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ளதைப் பற்றி..

DIN

தென்கொரியாவின் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 3வது ராணுவ உளவுச் செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள வாண்டென்பர்க் விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் ராக்கெட்டின் மூலம் தென்கொரியாவின் 3 வது ராணுவச் செயற்கைக்கோள் அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை காலை 3.34 மணிக்கு செலுத்தப்படவுள்ளது.

இந்த செயற்கைக்கோளின் மூலம் வடகொரியாவின் நடவடிக்கைகளை உளவு பார்க்க முடியும் எனக் கூறப்படுகிறது.

இந்த முயற்சி வெற்றியடைந்துவிட்டால் இது தென் கொரியாவின் மூன்றாவது ராணுவ செயற்கைக்கோளாகும். வடகொரியாவை கண்காணிக்க 2025 ஆம் ஆண்டின் முடிவிற்குள் சிறியது முதல் பெரியது வரையிலான ஐந்து செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ தென்கொரியா திட்டமிட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் தென் கொரியாவின் முதல் ராணுவ செயற்கைக்கோள் இதே கலிஃபோர்னியாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் இரண்டாவது செயற்கைக்கோள் கடந்த ஏப்ரலில் செலுத்தப்பட்டு வெற்றியடைந்த்து.

வடகொரியாவும் அதன் முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை கடந்த ஆண்டு நவம்பரில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இருப்பினும் கடந்த மே மாதம் செயற்கைக்கோளை சுமந்து விண்ணில் பாய்ந்த அதன் ராக்கெட் வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆன்லைன் கிரிக்கெட் டிக்கெட் விற்பனை மோசடி! இளைஞர்களே இலக்கு!!

ஒடிசாவில் பாஜக நிர்வாகி சுட்டுக்கொலை!

லோகா சாப்டர் 1! ஓடிடியில் எங்கே? எப்போது?

போலி தொழில்நுட்ப சேவை மோசடி: 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ஏர் இந்தியா விபத்தை சித்திரித்து துர்கா பூஜைக்கு வைக்கப்பட்ட அலங்கார பந்தலால் சர்ச்சை!

SCROLL FOR NEXT