பிரேசில் நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று கடையின் மீது விழுந்ததில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
தெற்கு பிரேசிலின் செர்ரா கவுச்சா மலைகளில் அமைந்துள்ள சுற்றுலா நகரமான கிராமடோ அந்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாகும். கிறிஸ்துமஸ் விடுமுறை காலங்களில் அங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்வார்கள்.
இந்நிலையில், நேற்று (டிச.22) காலை சிறிய ரக விமானம் ஒன்று அந்நாட்டின் ம்ற்றொரு சுற்றுலாத் தளமான கனேலாவிலிருந்து புறப்பட்டுள்ளது.
அந்த விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்தப் போது கட்டுப்பாட்டை இழந்து ஒரு கட்டடத்தின் புகைப்போக்கியின் மீது மோதியுள்ளது, பின்னர் அங்கிருந்து நிலைத்தடுமாறி வேறொரு கட்டடத்தின் இரண்டாம் தளத்தின் மீது மோதியுள்ளது, அதன்பின்னர் இறுதியாக ஒரு மரச்சாமான்கள் விற்கும் கடையின் மீது விழுந்து நொறுங்கியுள்ளது.
இதில் 9 பேர் பலியான நிலையில், 15 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: சொந்த போா் விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்: விமானி காயம்
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோரில் பெரும்பாலானோர் அங்கு ஏற்பட்ட நெருப்பின் புகையை சுவாசித்து மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது.
பைபர் செய்யினே 400 டர்போபாப் எனும் அந்த சிறிய ரக விமானத்தில் எத்தனைப் பேர் பயணம் செய்தார்கள் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இருப்பினும், அதில் பயணம் செய்தவர்கள் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.