கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

4 நாள்களாக ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தை!

ராஜஸ்தான் மாநிலத்தில் 4 நாள்களாக ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தையைப் பற்றி..

DIN

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 4 நாள்களாக ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி இன்றும் (டிச.26) தொடர்கிறது.

கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலத்தில் கடந்த திங்களன்று (டிச.23), சேத்துனா (வயது 3) என்ற பெண் குழந்தை 700 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. அந்த ஆழ்துளைக் கிணற்றின் 150வது அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 4 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இதுகுறித்து, தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரி யோகேஷ் மீனா கூறுகையில் குழந்தை தவறி விழுந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் 160 அடி ஆழத்திற்கு மற்றொரு குழி தோண்டப்பட்டதாகவும், 155 ஆவது அடியில் ஒரு பாறை இருந்ததினால் குழித்தோண்டும் பணி தாமதாமானதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மீட்புப் பணிக்கு தேவையான பொருள்களை அந்த இடத்திற்கு கொண்டு செல்வது மிகுந்த சவாலான ஒன்றாக இருந்ததினாலும், குழித்தோண்டும் இயந்திரத்தை அங்கு கொண்டுச் செல்ல சில மின்கம்பங்கள் அகற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது எனவும் அந்த குழித்தோண்டும் பணி முடிந்தவுடன் குழந்தைக்கு நேராக சுரங்கம் ஒன்று தோண்டி சேத்துனா மீட்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, 160 அடி ஆழத்தில் குழந்தைக்கு நேராக சுரங்கம் தோண்டும் பணியை எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் இதற்கு முன் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட தொழிலாளர் சுரங்க விபத்தின் போது சுரங்கம் தோண்டி அவர்களை மீட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அழ்துளைக் கிணற்றுக்குள் அனுப்பப்பட்ட கேமராவின் காட்சிகளின் அடிப்படையில் அதில் சிக்கியுள்ள குழந்தை சேத்துனாவின் உடலில் கடந்த 2 நாள்களாக எந்தவொரு அசைவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணி தாமதமாவதினால் அந்தக் குழந்தையின் குடும்பத்தினரும் கிராமவாசிகளும் மீட்புக்குழுவினர் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT