இபிஎஸ் 
தற்போதைய செய்திகள்

டிச. 30-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்: இபிஎஸ்

அண்ணா பல்கலை. விவகாரம்: டிச. 30-ல் ஆர்ப்பாட்டம் அதிமுக.

DIN

அதிமுக சார்பில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் வரும் டிச. 30 ஆம் தேதியன்று நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (டிச.27) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் இன்றைய போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி இன்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: 2024 - திருப்பங்களை ஏற்படுத்திய தீர்ப்புகள்!

இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய எடப்பாடி கே. பழனிசாமி, “அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

கைதான ஞானசேகரன் இன்னொரு சார் என்று ஒருவரை குறிப்பிட்டதாக பாதித்த மாணவி புகார் அளித்துள்ளார். அவர் யார் என்பதை வெளிக்கொண்டு வர வேண்டும். விசாரணை நேர்மையாக நடைபெறவில்லையெனில் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்.

அதிமுக சார்பில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் வரும் 30 ஆம் தேதி நடைபெறும்” என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று தமிழகம் திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

காரங்காடு படகு சவாரி ரத்து

காலமானாா் ஆா்.எஸ்.நாராயணன்

வாணிம்பாடியில் மரக்கடையில் தீ விபத்து

SCROLL FOR NEXT