கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

மொராக்கோ கடலில் அகதிகள் படகு மூழ்கியது! 69 பேர் பலி!

மொராக்கோ கடல் பகுதியில் அகதிகள் படகு மூழ்கியதில் 69 பேர் பலியானதைப் பற்றி..

DIN

மொராக்கோ கடல்பகுதியில் நாட்டுப் படகு மூழ்கியதில் 69 அகதிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிச.19 அன்று ஐரோப்பாவிலுள்ள ஸ்பெயின் நாட்டைச் சென்றடையும் நோக்கில் நாட்டுப் படகொன்றில் 80 பேர் சென்றனர். இந்தப் படகு, வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் கடல்பகுதியில் நீருக்குள் மூழ்கியது.

இந்த விபத்தில் 69 பேர் பலியானதாகத் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 25 பேர் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியைச் சேர்ந்தவர்கள் என அந்த நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், கடலில் தத்தளித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் மாலி நாட்டினர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஜிகாத் படைகளாலும், பிரிவினைவாத படைகளினாலும் தொடர் வன்முறைகள் நிகழ்ந்து வருவதினால் ஆயிரக்கணக்கான மக்கள், வாழ்க்கையைத் தேடி அந்நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இதையும் படிக்க: இஸ்ரேல் தாக்குதல்: நூலிழையில் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்!

இதில், மொராக்கோ நாட்டு கடற்பகுதியிலிருந்து ஸ்பெயின் நாடு வெறும் 14 கி.மீ என்பதினால் அதன் வழியாக ஏராளமான அகதிகள் தற்காலிக படகுகளை உருவாக்கி பயணித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தனியார் அமைப்பான கேமினாண்டோ ஃப்ரோடெராஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தாண்டில் (2024) மட்டும் சட்டவிரோதமாக ஸ்பெயின் நாட்டிற்கு பயணித்த 10,400 பேர் பலியாகியுள்ளார்கள் எனும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால் நாளொன்றுக்கு சுமார் 30 பேர் ஸ்பெயின் நாட்டிற்கு செல்லும் முயற்சியில் பலியாவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாப் கியர்(ரா) மாடல்!

மாதத்துக்கு 4 நாள்கள் அசைவம், ரூ.540 தினக்கூலி! பிரஜ்வல் ரேவண்ணாவின் சிறை வாழ்க்கை

பிங்க் பியூட்டி... ஐஸ்வர்யா ராஜேஷ்!

நீதிமன்றம் கண்டனம்: இது கட்சிகளின் ஜனநாயக உரிமை! - ராகுலுக்கு இந்தியா கூட்டணி ஆதரவு

ஒருவர் மட்டுமே வாழும் சிவகங்கை நாட்டாகுடி கிராமம்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT